ஒரே நாளில் 5000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலை சுமார் 5000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நேற்று (01) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 384,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் மாற்றங்கள்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் தொடர்ந்து பிரதிபலித்து வருவதால், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்