திடீர் மாற்றம் - தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 98 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து, 4,355 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
தங்கத்தின் விலை
இந்த நிலையில், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,342 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதன்படி, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி 63.58 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |