தங்க கடத்தலின் போது சுற்றிவளைக்கப்பட்ட மூவர் கைது
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை பத்தலங்குண்டுவைக்கு அண்மித்த கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 11 கிலோ 300 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் கைது
அத்தோடு, அண்மையில் இலங்கையில் (Sri Lanka) இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கிலோ தங்கம் இந்தியாவின் (India) இராமேஸ்வரத்தில் (Rameswaram) மீட்கப்பட்டிருந்தது.
இராமேஸ்வரம் வழியாக வாகனம் ஒன்றில் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்ட போது அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றிய நிலையில் கடத்திச் சென்ற இருவரையும் இந்திய மத்திய அரசின் சுங்கத்துறையின் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட தங்கத்தையும் கைது செய்தவர்களையும் மதுரைக்குக் (Madurai) கொண்டு சென்ற நிலையில் பிடிபட்ட தங்கத்தின் பெறுமதி இலங்கை நாணயத்தில் பத்து கோடி ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |