இளங்குமரன் எம்.பிக்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு - யாழ். தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

Sri Lanka Police Jaffna National People's Power - NPP
By Thulsi Jan 04, 2025 09:43 AM GMT
Report

தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் யாழ் வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (4.1.2024) சனிக்கிழமை உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீதியின் குறுக்காக வாகனத்தை நிறுத்தி

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் 65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை செய்து வருகிறோம். இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் சுண்ணக் கற்களை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாவகச்சேரியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வீதியின் குறுக்காக வாகனத்தை நிறுத்தி மறித்துள்ளார்.


விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வாகனத்தை எமது வாகனத்துக்கு முன்னால், பிரதான வீதியில் நிறுத்தி சாரதியை மிரட்டி வாகன திறப்பை வாங்கியமை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு.

1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1)( 2) பிரிவுகளின் பிரகாரம் எமது வாகனம் சுண்ணக் கற்களை எடுத்துச் சென்றது. முதலாவது பிரிவானது கனியவளங்களை அகழ்வதற்கான அனுமதி, எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் என்பவற்றை பற்றி கூறுகிறது.

அதன் பிரகாரம் கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கல் உடைக்கும் ஆலைகள் தமது வியாபார நிலையத்தை பதிவு செய்துள்ளார்கள். மத்திய சுற்றடல் அதிகாரசபையின் அனுமதி பெற்றுள்ளார்கள் அதுமட்டுமல்லாது கனியவளத் திணைக்களத்தில் அனுமதி பெற்றுள்ளார்கள்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலிருந்து ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு சகல அனுமதிகளும் பெற்றவர்களிடமிருந்து நாம் கல்லை மட்டும் வாங்குகிறோம்.

யாழ். சாவகச்சேரியில் பாரவூர்தியை வழிமறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்த செயல்

யாழ். சாவகச்சேரியில் பாரவூர்தியை வழிமறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்த செயல்

முறைப்படி அனுமதி

நாம் கிடங்கு கிண்டுவதோ அல்லது கல்லை உடைப்பவர்களோ அல்ல. முறைப்படி அனுமதி பெற்றவர்களிடமிருந்து பணம் கொடுத்து அவர்களின் கல்லை வாங்கி திருகோணமலைக்கு கொண்டு செல்கிறோம். அதில் நாமும் சிறிய இலாபம் அடைவதோடு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் கல் ஆலைகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாத்து வருகிறோம்.

இளங்குமரன் எம்.பிக்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு - யாழ். தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு | Jaffna Businessman Complins Ilankumaran Mp

இலங்கைச் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை இடம்பெற்று வரும் நிலையில் இதை அறியாத சிலரின் தூண்டுதலின் பேரில் எமது நிறுவனத்தையும் எமது வியாபாரத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இளங்குமரன் எம்.பி செயல்பட்டிருக்கிறார்.

பிரிவு இரண்டின் பிரகாரம் அரை கனியங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி தேவையில்லை. இதை அறியாத இளங்குமரன் எம்.பி எமது வாகனத்தை மறித்து கற்களுக்கு மேல் போடப்பட்டிருந்த பாதுகாப்பு உறையினை கிழித்து சட்டத்தை தன் கையில் எடுத்துள்ளார்.

ஏற்கனவே வவுனியா காவல்துறையினர் எமது வாகனத்தை மறித்து நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், நீதிமன்றமானது சட்டத்துக்கு உட்பட்டு வர்த்தக நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவித்து எமது வாகனத்தை விடுவித்தது. அது மட்டுமல்லாது கெப்பெற்றிக்கொல்லாவை நீதிமன்றமும் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தீர்ப்பு வழங்கியது .

வவுனியா நீதிமன்றம் மற்றும் கெப்பற்றிக்கொல்லாவ நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கில், சட்டத்துக்கு உட்பட்டு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதாக  நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

ஒரு மாகாணங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எவ்வாறு கருங்கல் சல்லி மற்றும் தூள் எடுத்து வரப்படுகிறதோ அதே நடைமுறை சுண்ணக்கல்லுக்கு இருக்கிறது. அரசாங்கம் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறுகின்ற நிலையில், விவசாயம் மேற்கொள்வதற்காக இரண்டு அடி ஆழம்வரை கல்லு தோண்டப்பட முடியும்.

ஆனால் இளங்குமரன் எம்.பி தென்மராட்சியில் உள்ள பழைய கிடங்கு ஒன்றினை காட்டி, நாம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இருந்து எடுத்துச் சென்ற சுண்ணக் கல்லுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

இளங்குமரன் எம்.பிக்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு - யாழ். தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு | Jaffna Businessman Complins Ilankumaran Mp

யாரோ 4 பேர் வழங்கிய தகவலை பொதுமக்கள் வழங்கிய தகவலாக தெரிவித்து ஊடகங்களில் தவறான செய்தியை வழங்கியுள்ளார். எமது நிறுவனத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதேபோல் கல் உடைக்கும் ஆலைகளை நம்பி பரம்பரை பரம்பரையாக கல்லுடைக்கும் தொழிலை மேற்கொள்ளும் 300க்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு எம்.பி பதில் கூறுவாரா?

அவரின் செயற்பாடு தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வழங்கிய ஊடக செய்திகள் தொடர்பில் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கணணி குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு வழங்க உள்ளேன்.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை தடுத்து தென் இலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்து அவர்களுக்கு தொழில் கொடுக்கும் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கடற்தொழில் அமைச்சரை சந்திப்பதற்கு சென்றேன். அவர் அங்கு இல்லை எனது ஆதாரங்களை அவரது அலுவலகத்துக்கு சமர்ப்பித்தேன்.

அதனை ஆராய்ந்த அவரது அலுவலக உத்தியோத்தர் அமைச்சரிடம் குறித்த விடயம் தொடர்பில் கூறினார். அதன்பின்னர் என்னிடம் பேசினார். நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு செய்வதை செய்யுங்கள் எனக் கூறினார். இது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆகவே மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. எனவே தொழில் வழங்குனர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் செயல்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினரை கேட்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி - கஜிந்தன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024