தென்னை மர உச்சியில் மீட்கப்பட்ட தங்க வளையல்கள் : காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பதுளையில் வீடொன்றில் திருடப்பட்ட பெறுமதியான தங்க வளையல், தென்னை மரத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல்கள் மீட்கப்பட்ட நிலையில், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதபத்தனை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த 22 வயதான இளைஞன் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
இதன்போது, 37,000 ரூபாய் பணத்தையும் திருடிச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |