சுரங்கத்தில் கொட்டி கிடந்த விலைமதிக்க முடியாத தங்கம் : எந்த நாட்டில் தெரியுமா !
சீனாவின் (China) சுமார் 600 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம் கோடி) பெறுமதி உடைய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் பிங்ஜியாங் கவுண்டியில் இந்த மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹுனான் மாகாண புவியியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் லியு யோங்ஜுன் கருத்து தெரிவிக்கையில், இந்த கண்டுபிடிப்பு சீனாவின் கனிம ஆய்வு உத்திக்கு கிடைத்த பெரும் வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தல் : கனேடிய அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மொத்த தங்க இருப்பு
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தரையில் இருந்து இரண்டாயிரம் மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் குவிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோண்டி எடுக்கும் பணி
சுரங்கத்தின் முக்கிய பகுதியில் உள்ள மொத்த தங்க இருப்பு தற்போது 300.2 டன்களை எட்டியுள்ள நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் 1,000 டன் தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம் கோடி) ஆகும்.
இந்த தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |