தலைமன்னாரில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பெறுமதியான தங்கம் : தமிழகத்தில் பறிமுதல்

Tamil nadu Sri Lanka India Gold
By Sathangani Jan 05, 2024 04:25 AM GMT
Report

தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தனுஷ்கோடிக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகில் கடத்திச் செல்லப்பட்ட 7.70 கிலோ தங்கம் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து நேற்றிரவு (4)  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடத்தலில் ஈடுபட்ட நபர்  அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரணிலின் யாழ் வருகை: போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை

ரணிலின் யாழ் வருகை: போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை

கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கம் 

தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கையில் இருந்து சமீப காலமாக அதிக அளவு கடத்தல் தங்கம் நாட்டுப் படகுகளில் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பெறுமதியான தங்கம் : தமிழகத்தில் பறிமுதல் | Gold Worth Crores Smuggled From Talaimannar

இந்நிலையில் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு  நேற்றிரவு தலைமன்னாரில் இருந்து கடல் வழியாக நாட்டுப்படகில் ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுக கடற்கரைக்கு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ராமேஸ்வரம் கடற்றொழில்  துறைமுகம் அருகே வந்து நின்ற படகில் இருந்து மர்ம நபர் ஒருவர் தங்கக் கட்டிகள் கொண்ட பொதியை கரையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் படகில் புறப்பட்டு சென்றார்.

வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்திற்கேயாகும் : நம்பிக்கையளித்த அகிலவிராஜ் காரியவசம்

வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்திற்கேயாகும் : நம்பிக்கையளித்த அகிலவிராஜ் காரியவசம்

7.70 கிலோ தங்கம் 

கடத்தல் தங்க கட்டிகளை பெற்றுக்கொண்ட நபர் இரு சக்கர வாகனத்தில் அதை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடம் தர்கா பேருந்து தரிப்பிடம்  அருகே சென்று கொண்டிருக்கும் போது அவரை பின் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த அந்த நபர் இருசக்கர வாகனத்தை அவ்வழியாக சென்ற முச்சக்கர வண்டியில் மோதி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

தலைமன்னாரில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பெறுமதியான தங்கம் : தமிழகத்தில் பறிமுதல் | Gold Worth Crores Smuggled From Talaimannar

அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற போது அதிகாரியை தள்ளிவிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி சென்றார்.பின்னர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள பையில் தங்க கட்டிகள் இருந்தது.

தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து எடை போட்டு பார்த்ததில் அதில் சுமார் 7.70 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

அரிசியின் வரி குறைப்பு! வெளியான அதிவிசேட வர்த்தமானி

அரிசியின் வரி குறைப்பு! வெளியான அதிவிசேட வர்த்தமானி

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டு சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமன்னாரில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பெறுமதியான தங்கம் : தமிழகத்தில் பறிமுதல் | Gold Worth Crores Smuggled From Talaimannar

பறிமுதல் செய்யப்பட்ட  தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 4.50 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்தல் தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிக்க ராஜதந்திர செயற்பாடுகள்

மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிக்க ராஜதந்திர செயற்பாடுகள்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி