கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான அறிவிப்பு
மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5,000 ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதன்படி நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் பேரிடர் சூழ்நிலை
நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன்களை மீள செலுத்துவதற்கான காலத்தை, பாதிப்புக்களின் அடிப்படையில் 3 - 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறுகிய காலத்துக்குள் அவசர நிலைமைகளின் போதான புதிய கடன்களை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கியால் சகல வங்கிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |