கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் : அநுரவிற்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர்
புதிய இணைப்பு
கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) அனுமதி அளித்துள்ளமைக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஜனாதிபதிக்கு தன்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற எரிபொருளுக்கு லீற்றர் ஒன்றிற்கு
தலா 25 ரூபாய் மானியம் வழங்குவதற்கான டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு கடந்த
அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த போதும் தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய
குறித்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்தும்
நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு உரமானியத்தை ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சலுகையானது, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இதுவரை ஹெக்டேயருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா உர மானியம் ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
விவசாயிகளின் வங்கி கணக்கு
அத்தோடு, விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
I advised the Treasury to increase the fertilizer subsidy for paddy farmers in the 2024/25 Maha season from Rs. 15,000 per hectare to Rs. 25,000 from October 01st.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 26, 2024
சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கும் மானியம்
இதேவேளை, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |