கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
கனடாவில் (Canada) வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளின் விலை குறைவு மற்றும் அடகு கடன் வட்டி விகித மாற்றம் போன்ற நிலைமைகள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.
குறித்த விடயத்தை ரேட்ஹப்.சீஏ (Ratehub.ca) என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது.
வீடு கொள்வனவு
கடந்த ஒகஸ்ட் மாதம் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச வருமான அளவு சராசரி தொகை குறைவடைந்துள்ளது.
12 நகரங்களில் இவ்வாறு வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக கனடாவில் விலை உயர்ந்த வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நகரங்களான ரொறன்ரோ, விக்டோரியா மற்றும் வாங்கூவார் போன்ற பகுதிகளிலும் இந்த மாற்றத்தை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
