தங்க விலையில் திடீர் வீழ்ச்சி : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (26.05.2026) திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 391,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது அது திடீரென 2,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
விலை நிலவரம்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (26) 4,570.32 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 78.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |