மின்பாவனையாளர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சிச் செய்தி!
Sri Lanka
People
Keheliya Rambukwella
By Vasanth
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 6 மாத கால சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்பக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போருக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளர்.
இந்த நிலையில், குறிப்பிட்ட காலப்பகுதி வரையில், மின்சார விநியோகத்தை துண்டிக்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி