கூகுளில் அழிக்கப்படவுள்ள பில்லியன் கணக்கான தரவுகள்!
இணையவாசிகள் மறைநிலை சேவை(incognito) வழியில் தனிப்பட்ட முறையில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களை மறைமுகமாக கண்காணிக்கும் வழக்கு ஒன்றை தீர்க்கும் வகையில் பில்லியன் கணக்கான தரவு பதிவுகளை அழிப்பதற்கு கூகுள் இணங்கியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ(San Francisco) மத்திய நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (01) வழக்கு ஒன்று முன்மொழியப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் கிரோம் புரோசரின்(Chrome Prosser) மறைமுகமான செயற்பாட்டின் மூலம் அதனை பயன்படுத்தும் மக்களுடன் தொடர்புபட்ட பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை நீக்குவது அல்லது திருத்தம் செய்வதற்கு கூகுளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயனர்கள்
மேற்படி இந்த வழக்கானது 2020 இல் குறைந்தது ஐந்து பில்லியன் டொலர்(dollar) இழப்பிடு கோரி தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கை தீர்ப்பதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்ட போதும் இது கிரோம்(Chrome ) பயனர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதி கூகுள்(Google) மீது வழக்கு தொடுக்க வழி வகுத்துள்ளது.
உத்தரவு
இந்த தரவு அழிப்பு அமெரிக்காவுக்கு(America) வெளியிலும் பொருந்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இணையவாசிகள் மூன்றாம் தரப்பு கூகீஸ்(Third-party cookies) அம்சத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மறுக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |