கோட்டாபய அளித்த அனுமதி - தயார்படுத்தப்படும் ஆவணங்கள்
gotabaya
m.p s
vechile
pemision
By Sumithiran
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் சொகுசு வாகனங்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்றும், தற்போது உள்ள வாகனங்களைப் பயன்படுத்தும்படியும் பதிவயேற்ற கையோடு தெரிவித்திருந்தார்.
எனினும் தற்சமயம் வாகனங்கள் தேவைப்படுவதாக பல மாதங்களாக ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதியை அவர் அளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வங்கியின் ஊடாக வாகன இறக்குமதிக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ஆவணங்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்