கோட்டாபய நாட்டின் மிகப்பெரிய முட்டாள் : அரச தலைவர் அதிகாரத்தை இழந்து விட்டார் : ஓமல்பே சோபித தேரர்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Gota Go Home 2022 Omalpe Sobitha Thero Sri Lanka Anti-Govt Protest
By Steephen Jul 09, 2022 10:57 AM GMT
Report

நாட்டில் இருக்கும் மிகப் பெரிய முட்டாளாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்கள பௌத்த மக்கள் மாத்திரமல்லாது அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களும் தற்போதைய அரச தலைவரின் அதிகாரத்தை சூனியமாக்கியுள்ளனர்.

அது மட்டுமல்ல. கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் 97 வீதமாக மக்கள் அவரை வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளனர்.

கோட்டா கோ என்ற கிராமத்தை காலிமுகத்திடலில் ஆரம்பித்து அது மிகப் பெரிய அமைப்பாக காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவியது. கோட்டாபய தற்போதாவது செல்ல வேண்டும்.

தன்னைத் தானே முட்டாள் எனக் கூறும் கோட்டாபய எங்களை புத்திசாலித்தனமாக நடக்குமாறு கூறுகிறார்

ராஜபக்ச குடும்பத்தில் முட்டாள் தான் எனக் கூறும் அரச தலைவரே நேற்று மாலை அறிக்கையை ஒன்றை வெளியிட்டு மக்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு கூறினார்.

மக்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு அவர் நேற்று மாலை கூறினார். புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு மக்களை யாரை கூறினர்? ராஜபக்ச குடும்பத்தில் நான் முட்டாள் என அவரே கூறுகிறார்.

கோட்டாபய நாட்டின் மிகப்பெரிய முட்டாள் : அரச தலைவர் அதிகாரத்தை இழந்து விட்டார் : ஓமல்பே சோபித தேரர் | Gota Fool He Must Resign Post

ராஜபக்ச குடும்பத்தில் முட்டாள் தான் என அவரே தனது வாயால் கூறுகிறார். அந்த முட்டாள் எங்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கின்றார்.

நாட்டில் இருக்கும் மிகப் பெரிய முட்டாளாக கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார். இதனால், அவர் தற்போது மறைந்திருக்கும் இட்த்தில் இருந்துக்கொண்ட அரச தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும்.

புதிய அரச தலைவரை தெரிவு செய்ய வேண்டும் - ரணிலை ஒரு நொடிக்கு கூட அந்த பதவியில் நியமிக்கக்கூடாது

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் அரச தலைவரின் அதிகாரங்கள் மக்களின் அதிகாரத்தால் சூனியமாக்கப்படும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சபாநாயகர், கட்சித் தலைவர்களை கூட்டி தீர்மானத்தை எடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி, நாட்டு மக்களின் உண்மையான பலம் மற்றும் விருப்பத்தை வென்றெடுத்துள்ள நபரை அரச தலைவராக நியமித்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

சபாநாயகருடன் நான் கதைத்தேன். உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதாக சபாநாயகர் கூறினார். நாட்டில் அரச தலைவர் ஒருவர் இல்லை.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் ஒன்றை எடுங்கள். புதிய அரச தலைவரை நியமிக்க வேண்டும். அவர் கட்சித்தலைவராக மாத்திரமல்ல, நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்.

கோட்டாபய நாட்டின் மிகப்பெரிய முட்டாள் : அரச தலைவர் அதிகாரத்தை இழந்து விட்டார் : ஓமல்பே சோபித தேரர் | Gota Fool He Must Resign Post

நாடாளுமன்றத்தில் அரச தலைவரை தெரிவு செய்ய முடியாது என்றால், தேசியப் பட்டியல் ஊடாக சிவில் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க என்ற பொம்மையை அரச தலைவராக தெரிவு செய்யக்கூடாது. மாளிகை சூழ்ச்சியின் மூலம் ரணில் விக்ரமசிங்க என்ற நபரை நாட்டின் அரச தலைவராக ஒரு நொடிக்கு கூட நியமிக்கக் கூடாது எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மக்களின் பலம் இல்லை எனவும் அவரை தொடர்ந்தும் அரச தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வ மத தலைவர்கள் கூறியுள்ளனர். 

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024