கோட்டா கோ கம தாக்குதல் - நாமலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
CID - Sri Lanka Police
Namal Rajapaksa
Gota Go Gama
By Sumithiran
கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இன்று பிற்பகல் 4 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 4 மணிநேரம் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கோட்ட கோ கம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் விலகவில்லை எனவும் விசாரணைகளுக்கு தாம் பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்றில் உரையாற்றும் போது நாமல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்