பல்கலைக்கழக மாணவர்கள் 31 பேருக்கு தொற்றியது கொரோனா!!
covid
vavuniya
patient
By Vanan
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் 31 மாணவர்களிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் இன்றையதினம் சுகாதார பிரிவினரால் அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகளின் பிரகாரம் 31 பேருக்கு தொற்று இருப்பது உறுதுசெய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தென்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த மாணவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதுவரையில், வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்