வேறொரு உலகத்திலிருந்து உரையாற்றிய கோட்டாபய -எதிரணி சாடல்
speech
gotabaya
another world
By Jaso
நேற்றையதினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, ஜனாதிபதித் தேர்தலில் வெளியிடப்பட்ட தமது கொள்கை அறிக்கையை மீண்டும் வாசித்தார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ராகுமான் தெரிவித்தார்.
நாடு எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி பதில் அளிப்பார் என்ற கருத்து மக்களிடையே உள்ளது என்றும், நாட்டை படுகுழியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஜனாதிபதியால் எடுக்கப்பட வேண்டிய எந்த நடவடிக்கையும் அவரது பேச்சில் முன்மொழியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேறொரு உலகத்திலிருந்து தேசத்துக்கு உரையாற்றினார் என்றும், தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியாமல் போனதால் அரசாங்கம் மீண்டும் தோல்வியடைந்துள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்