கோட்டாபய மற்றும் மகிந்தவை கடுமையாக விமர்சித்த தேரர்- வெளியான காணொளியால் பரபரப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும், நிலையில் தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் ஆட்சியாளர்களை காரசாரமாக விமர்சிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமரை ஒருமையில் விளித்து கருத்து வெளியிடும் குறித்த தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எருமைகள் என விமர்சித்துள்ளார். குறித்த தேரர் யார் என்பது குறித்த தகவல்களை கண்டறிய முடியாத போதிலும், இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்துள்ளது.
"கோட்டா, உங்களுடைய பிள்ளைகள் உயிரிழக்கப்போவது இல்லை, இந்த நாட்டின் அப்பாவி மக்களின் பிள்ளைகளே உயிரிழப்பார்கள். மஹிந்த ராஜபக்ச உங்களுடைய பிள்ளைகள் உயிரிழக்கப்போவது இல்லை. நீயெல்லாம் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளீர்கள். நாடாளுமன்றத்தில் உள்ள 225 எருமைகளும் தடுப்பூசியை போட்டுள்ளனர்.
எருமை பிரதமரே உனக்கு விளங்காவிடினும், அதிவேக வீதிகளை அமைப்பது அல்ல இந்த வேளையில் அவசியமான விடயமல்ல, மக்களுக்கு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டியதே இப்போதைய தேவை. நாட்டை முடக்கியே ஆக வேண்டும். முதலாளிகள், ஆட்சியாளர்கள், தலதா மாளிகையில் உள்ள தேரர்கள் என அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
உயிரிழக்கப்போவது இல்லை. கொரோனாவை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள். இரண்டு மாதங்களில் தடுப்பூசி கிடைக்கும் என தெரிவித்தார்கள். எதுவும் இடம்பெறப்போவது இல்லை. நாட்டை முடக்குமாறு எந்தவொரு தேரரரும் இதுவரை வாய்த்திறந்து கோரவில்லை. நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய தேவையல்ல.
நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு எந்த நாட்டில் இருந்தாவது தடுப்பூசியை வரவைழையுங்கள். இன்று அனைத்தும் வியாபாரமாக மாறியுள்ளது. தடுப்பூசியை போடமாட்டேன் எனக் கூறிய ஹரின் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார். அநுர திசாநாயக்க அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்."