சுமையாக உருமாறிய கோட்டாபய அரசாங்கம்! ஒப்புக் கொண்டார் ஆளும் தரப்பு உறுப்பினர்
கோட்டாபய மகிந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு சுமையாகியுள்ளது என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டு செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை உருவாக்குபவர் வெளியில் இல்லை என்றும் அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கொத்தலாவல சட்டமூலம், இரசாயன உயரத் தடை, துறைமுகத்தின் மேற்கு முனையம், யுகதனவ் மின் உற்பத்தி நிலையம் போன்ற பிரச்சினைகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பினரால் உருவாக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரசாயன உரப் பயன்பாட்டு தடை ஓர் தூரநோக்கற்ற தீர்மானம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சரியாக திட்டமிட்டு நீண்ட கால அடிப்படையில் விவசாயிகளின் நலன்களை கருத்திற்கொண்டு இந்த சேதன பசளை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் இவ்வாறான நெருக்கடிகளை அரசாங்கம் சந்தித்திருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.