கோட்டாபயவின் முறையற்ற பொருளாதார வேலைத்திட்டம் : வருமானத்தை அதிகரிக்க ரணில் நடவடிக்கை

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Japan Sri Lanka Relationship Economy of Sri Lanka
By Sathangani Jan 19, 2024 06:28 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க 2024ஐ வாழ்க்கைச்செலவை தளர்த்தும் வருடமாக தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சவாலான விடயம் என்றாலும் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் இந்த வருடத்தில் நூற்றுக்கு 2 வீதம் அதிகரித்துக்கொள்ள முடியும் அதேநேரம் 2025ஆம் ஆண்டில் அதனை நூற்றுக்கு 5 வீதமாக அதிகரித்துக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

சர்வதேச நாணய நிதியம் 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 2017ஆம் ஆண்டிலே நாட்டின் மொத்த வருமானம் 1914 பில்லியனாக இருந்ததுடன் ஆரம்ப செலவு 1892 பில்லியனாக இருந்தது. இதன் மூலம் ஆரம்ப கணக்கீட்டில் 22 பில்லியன் ரூபா மீதமாகி இருந்தது.

கோட்டாபயவின் முறையற்ற பொருளாதார வேலைத்திட்டம் : வருமானத்தை அதிகரிக்க ரணில் நடவடிக்கை | Gotabaya Ill Conceived Economic Program Ranil Act

இவ்வாறு இருந்த நாடு, 2022 ஆகும்போது மொத்த தேசிய வருமானம் 2013 பில்லியனாகவும் ஆரம்ப செலவு 2908 பில்லியனாகவும். இருந்தது. அதனால் ஆரம்ப கணக்கில் 895 பில்லியன் ரூபா மறை பெருமானத்திலே இருந்தது. அதன் பிரகாரம் 2022இல் எமது அத்தியாவசிய செலவுகளுக்கு கூட எமக்கு பணம் இருக்கவில்லை.

அத்துடன் 2023இல் சர்வதேச நாணய நிதியம் எமது தேசிய வருமானத்தை 2850 பில்லியனாக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை வழங்கி இருந்தது. அப்போது எமது ஆரம்ப செலவு 3063 பில்லியன் ரூபாவாக இருந்தது. அதன் பிரகாரம் எமது ஆரம்ப கணக்கீட்டு தொகை 209 பில்லியன் ரூபா மறை பெருமானத்துக்கு செல்லும் என்றே நாணய நிதியம் எதிர்வு கூறியிருந்தது.

எனினும் அதிபரின் திறமையாலும் அரச வருமானத்தை அதிகரிக்கும் நிறுவனங்களின் செயற்திறமையினாலும் 2023 இல் தேசிய வருமானத்தை 3,115 பில்லியனாக அதிகரிக்க முடியுமாகி இருந்தது. அதன் ஆரம்ப செலவுகள் 3063 பில்லியனாகும். அதன் பிரகாரம் 2023 இல் எமது ஆரம்ப கணக்கீட்டில் 52 பில்லியன் ரூபா நேர் பெறுமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமாகி இருந்தது.

கொழும்பில் ஆபத்தில் உள்ள 06 அடுக்குமாடிக் குடியிருப்புகள்

கொழும்பில் ஆபத்தில் உள்ள 06 அடுக்குமாடிக் குடியிருப்புகள்

அரச ஊழியர்களுக்கு வழங்கவுள்ள கொடுப்பனவு

அதன் காரணமாகவே அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதாக இருந்த 10 ஆயிரம் கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபா ஜனவரியில் வழங்க முடியுமாகி இருந்தது. எஞ்சிய 5ஆயிரம் ரூபாவை ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க முடியுமாகும்.

கோட்டாபயவின் முறையற்ற பொருளாதார வேலைத்திட்டம் : வருமானத்தை அதிகரிக்க ரணில் நடவடிக்கை | Gotabaya Ill Conceived Economic Program Ranil Act

அத்துடன், 2024 இல் மொத்த தேசிய வருமானத்தை 4,117 பில்லியனாக அதிகரிப்பதே எமது இலக்காகும். ஆரம்ப கணக்கீட்டில் 250 பில்லியன் ரூபா நேர் பெறுமானமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும் என நாணய நிதியம் தெரிவித்திருக்கின்றமை மிகவும் சவாலான விடயமாகும்.

ஏனெனில் 2024 வாழ்க்கைச்செலவை தளர்த்தும் வருடமாக தெரிவித்திருக்கிறார். என்றாலும் அந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. 2023 இல் சுற்றுலா பயணிகள் 15லட்சம் பேர் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். ஜனவரி 15 ஆம் திகதிவரை 5 இலட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் 2024 முடிவடையும்போது 25இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

ராஜ் ராஜரட்ணத்தின் 'சமனற்ற நீதி' நூல் வெளியீட்டு விழா!

ராஜ் ராஜரட்ணத்தின் 'சமனற்ற நீதி' நூல் வெளியீட்டு விழா!

வெளிநாட்டு செலாவணி அதிகரிப்பு  

அதேபோன்று வெளிநாட்டு செலாவணி கடந்த வருடத்தை விட நூற்றுக்கு 53வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் வருமானம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அதன் பிரகாரம் 2024 வாழ்க்கைச் செலவை தளர்த்தும் வருடம் என்றவகையில் அதனை செய்ய முடியுமாகும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

கோட்டாபயவின் முறையற்ற பொருளாதார வேலைத்திட்டம் : வருமானத்தை அதிகரிக்க ரணில் நடவடிக்கை | Gotabaya Ill Conceived Economic Program Ranil Act

கடந்த காலங்களில் கொவிட் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ்வின் முறையற்ற பாெருளாதார வேலைத்திட்டம் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அந்த தொழிற்சாலைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான சூழலை அதிபர் ஏற்படுத்தி இருக்கிறார்.

அபரின் இந்த வேலைத்திட்டங்களை ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டி இருந்ததுடன் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அதிபரிடம் உறுதியளித்திருக்கிறார்“ என தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் காவல்துறையினரே! பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் காவல்துறையினரே! பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026