இலங்கை திரும்பியதும் கோட்டாபயவுக்கு காத்திருக்கும் நெருக்கடி..! வெளியான உள்ளக தகவல்கள்
Go Home Gota
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Singapore
By Kanna
இலங்கையை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்குத் திரும்பியவுடன் அவர் யுத்தக்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜூலை மாதம் மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
