கோட்டாபயவிற்கு சென்ற கடிதம்! அமைச்சரவையில் வருகிறது மாற்றம்?
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது தொடர்பில் அரச தலைவருக்கு கடிதங்களை அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், அமைச்சுகளின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன, திட்டங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் கோட்டாபய ஆராய்ந்துள்ளார்.
அந்தக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அமைச்சரவை மாற்றத்துக்கு ஆரம்பத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் தகவல்
வெளியாகியுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்