கோட்டாபய - மைத்திரி விரைவில் சந்திப்பு! சூடுபிடிக்கும் அரசியல் களம்
SLFP
SLPP
SriLanka
Gotabaya Rajapaks
By Chanakyan
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சந்திப்பானது எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 4 மணிக்கு அரச தலைவர் செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சரவையில் இருந்து அரச தலைவர் வெளியேற்றியுள்ளார்.
எனினும், பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, சிறிலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு தனது நிலைப்பாட்டை அரச தலைவர் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறக்கூடும் என தெரியவருகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி