கோட்டாபயவின் வருகையால் குடும்பத்திற்குள் வெடித்த பூகம்பம்..! கோபத்தில் மகிந்த
நாடு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அதிபரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் குழுவிடம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு யோசனை முன்வைத்துள்ளது.
எவரும் வரவேற்க செல்லவில்லை
எனினும் அதற்கு மகிந்த குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் சுதந்திரமாக வாழ்வதையே இன்று செய்ய வேண்டும் என மகிந்த தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாமல் ராஜபக்ச அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
