நாடு திரும்பிய கோட்டாபய தொடர்பில் வெளியான தகவல்
தேவையான வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்
தாய்லாந்திலிருந்து நாடு திரும்பிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு தேவையான வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழேயே கோட்டாபய ராஜபக்சவிற்கு மேற்படி வசதிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு(02) நாடு திரும்பினார்.
சிங்கப்பூரிலிருந்து வந்த விமானம்
சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தின் மூலம் நேற்றிரவு(02) 11.30 மணியளவில் முன்னாள் அதிபர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய முதலில் சிங்கப்பூருக்கும் பின்னர் மாலை தீவிற்கும் இறுதியாக தாய்லாந்திற்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் வெளியே எங்கும் செல்லக்கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஹோட்டலில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.