கோட்டாபயவை விடாது துரத்தும் தமிழர்கள்!! களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்
ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்நகரத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த மாநாட்டில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இதேவேளை, இன்று அதிகாலை ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ நகரில் தங்கியிருந்த விடுதியை சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotelஇல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல உலகத் தலைவர்கள் தங்கியிருக்கின்ற நிலையில், அங்கு தங்கியிருக்கும் கோட்டாபயவுக்கு எதிராக இன்று அதிகாலை முதல் கோஷங்களை எழுப்பி எமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.
ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி', 'மனித உரிமைகளை மீறுபவர்', 'கொலையாளி' என்று பல்வேறு கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தன.
இந்நிலையிலேயே தற்போது, புலம்பெயர் தமிழர்கள் மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதன் நேரலை இணைக்கப்பட்டுள்ளது.










