ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார் கோட்டாபய?
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கணக்குப் பார்க்க தெரியாது போல விளங்குகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கருப்பு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நேற்றைய தினம் அரச தலைவர் தனது விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
நான் நினைக்கின்றேன் அரச தலைவருக்கு கணக்குப் பார்க்க தெரியாது என்று.
விவசாயிகளின் ஒரு கிலோ நெல்லுக்கு 95 ரூபாய் கூட கொடுத்தால் அவர்களுடைய முதலீடு கூடப் பெற முடியாது என்பது அரச தலைவருக்கு விளங்கவில்லை. கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் அரச தலைவராக வந்தால் இந்த நிலை தான் வரும்.
அதேபோன்று அவருடைய ஆதரவாளர்களான இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளது” என்றார்.