சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவின் விசேட உத்தரவு - அமுலுக்கு வரும் புதிய பிரகடனம்
srilanka
corona
death
gotabaya
peoples
By S P Thas
அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 2 ஆம்திகதி சரத்தின் கீழ் அரச தலைவருக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்தல், அதிக விலைக்கு விற்றல், உள்ளிட்ட செயற்பாடுகளின் ஊடாக நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாகும் சந்தை முறைக்கேடுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,