கோட்டாபயவிற்காக நடிகர்களாக மாறும் அமைச்சர்கள்
அமைச்சர்களின் செயலால் கடும் அதிருப்தியுற்றுள்ள சபாநாயகர், அவர்களை நாடாளுமன்றுக்கு வருகை தரவைப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய(Gotabaya rajapaksha) ராஜபக்சவை அழைக்கவேண்டுமென கடும் விசனத்துடன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு கோட்டாபய வருகை தரும் நாட்களில் மாத்திரம் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு வருகை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க எந்தவொரு அமைச்சரும் நாடாளுமன்றில் இல்லையெனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியது அவசியமெனவும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
எனவே, எதிர்வரும் நாட்களில் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளருக்கு சபாநாயகர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.