ரஞ்சன் ராமநாயக்கவை ஏமாற்றிய கோட்டபாய அரசு
சிறையிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்க பூரண சுதந்திரத்தைப் பெறுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் இன்று விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவின் பெயரையும் உள்ளடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரை விடுதலை செய்யாவிட்டால் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டு விடுதலையாகும் வரை போராடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
