2030 வரை வகுத்த திட்டம் - வெளிவரும் புதிய தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மேலும் எட்டரை ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து 2030இல் தீர்மானிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் செமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (12) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். " எங்களுக்கு நிறைய தலைவர்கள் உள்ளனர்.
அப்போது நாங்கள் முடிவு செய்வோம். கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தின் ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அப்போது 10 வருட பதவிக் காலத்தின் ஒன்றரை வருடங்களே இதுவரை கழிந்துள்ளது.
இன்னும் எட்டரை ஆண்டுகள் எங்களுக்கு பயணிக்கக் கூடிய தன்மை உள்ளது.
நாங்கள் 2030 வரை வகுத்த திட்டத்தின் படி. நாங்கள் 2030ன் பின்னர் எமது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பற்றி தீர்மானிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.