வீண் அச்சம் வேண்டாம் - கோட்டாபய அரசாங்கத்திற்கு சென்ற தகவல்
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பீதி அடைய வேண்டாமென அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக பிக்குகள் முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபை அமைப்பு இந்த நாட்டுக்குத் அவசியமான ஒன்றல்ல. அதன் பலத்தினால் பெறப்பட்டது ஒன்றுமல்ல.
இதனால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லை. மாகாண சபை தேர்தல் தோல்வியடைந்ததால் மக்கள் எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.
மாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகும். இது தேசிய குற்றமாகும்.மேலும் மாகாண சபை தேர்தலை பீதியுடன் நடத்த வேண்டாம் இதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர்.
அதன்போது மாகாண சபைகள் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க முடியும். எனவே மாகாண சபை தேர்தல் குறித்து பீதி அடைய வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி, பிக்குகள் கையெழுத்திட்ட கடிதமொன்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.