கோட்டாபயவின் வெளிப்படையான அச்சுறுத்தலுக்கு கடும் கண்டனம்
srilanka
gotabhaya rajapaksa
anurakumaradissanayaka
By Vasanth
ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரம் அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.