கோட்டாபயவின் கருத்துக்கு செவிசாய்க்காத அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்
ஜனாதிபதி கோட்டாபய கூறிய ஒன்றையுமே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னெடுப்பதில்லை என அவரிடமே தான் நேரடியாக தெரிவித்ததாக நாடாளுமனற உறுப்பிளனர் எஸ.பி திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கெட்டம்பே ராஜோபவனாராம விகாராதிபதி கெப்பிடியாகொட சிறிவிமல தேரரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி எந்தளவு வேலை செய்தாலும் அதனை அதிகாரிகளும் அமைச்சர்களும் முன்னெடுப்பதில்லை என்பதை தான் ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
"கடந்த நாட்களில் ஜனாதிபதி நிறைய வேலைகள் செய்கிறார். எவ்வளவு செய்தும் மக்கள் தம்மை திட்டுவதாக கூறினார்.
நான் மிகவும் நிலைகுலைந்து போயுள்ளேன். ஏன் என்று கேட்டார்.
செயலாளர்களும் இருந்தனர். அப்போது நான் கூறினேன். நீங்கள் கூறிய எதனையும் செய்யவில்லை என்று. ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
முன்னால் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளார். நீங்கள் 1000 தேசிய பாடசாலைகள் அமைக்க கூறினீர்கள். எத்தனை அமைத்துள்ளார் என கேளுங்கள் என்றேன்.
ஒன்றுகூட இல்லை! அடுத்தது காணி, அதோ காணி செயலாளர் உள்ளார். 15,000 தொடக்கம் 20,000 வரை மக்களுக்கு காணிப்பிரச்சனை உள்ளது. அந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
வணக்கத்திற்குரிய தேரரே எதுவும் நடப்பதில்லை. ஜீஎல். ஒன்றும் செய்கிறார் இல்லை. நாம் உருவாக்கிய அரசாங்கம். வேகமாக வேலை செய்ய வேண்டும்.
அப்படி இன்றி முடியாது" என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.