விரைவில் மாற்றமடையும் அமைச்சரவை! முக்கிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்த கோட்டாபய
Gotabaya Rajapaksa
SriLanka
Keravapittiya
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் (Gotabaya Rajapaksa) ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே முக்கியமான சந்திப்பொன்று நடைபெற உள்ளது.
இச்சந்திப்பானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ளது என தென்னிலங்கை அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளதாகவும் கெரவலப்பிட்டிய தொடர்பிலான அமெரிக்க ஒப்பந்தம் பற்றி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தலை செய்யவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் அமைச்சரவை மாற்றமொன்று விரைவில் நிகழக்கூடும் என்று பேசப்படுகின்ற நிலையில் இந்த சந்திப்பும் இடம் பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி