“கோட்டா கோ கம” போராட்டக்காரர்களுக்கு காவல்துறை விதித்த காலக்கெடு (காணொலி)
“கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளை காலி செய்வதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பேச்சாளர்களைப் பயன்படுத்தி காவல்துறை பொது அறிவிப்பை வெளியிட்டது.
அத்துடன், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை காவல்துறையினர் மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல்களின்படி செயல்படாத நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
#SriLanka: Police team arrives at 'Gota go gama' (area between SWRD statue and Baladaksha Mw); makes announcement asking remaining resident-protesters to remove "illegal structures" before August 5, 5 pm 1/2 pic.twitter.com/lFpZOSyf1l
— Meera Srinivasan (@Meerasrini) August 3, 2022
ஓகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்குள் அனைத்து கூடாரங்களையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியை காலி செய்யுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை உறுதிப்படுத்தியது.

