மின்சார சபை ஊழியர்களுக்கான போனஸ் குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Government Of Sri Lanka
Ceylon Electricity Board
By Shalini Balachandran
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் தொகையை விரைவில் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை தேசிய ஊழியர் சங்கம் விடுத்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு சங்கத்தின் இலங்கை போக்குவரத்து சபை இது குறித்த கடிதமொன்றை அனுப்பி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள்
2024 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பல அரச நிறுவனங்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளதால், மின்சார ஊழியர்களும் அதனைப் பெற வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், மின்சார கட்டண நிவாரணம் மக்களுக்கு கிடைக்காத பின்னணியில், மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை என அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்