அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலின் சாதகமான அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசாங்க வருமான அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த ஆண்டு அரச ஊழியர்களில் சம்பளம் மீள்பரிசீலனை செய்யப்படலாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இன்று (09) அதிபர் ரணில் விடுத்த விசேட அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சம்பள அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், 2024 ஆம் ஆண்டு அதனை சமாளிக்கும் அளவிற்கு அரச வருமானம் வளர்ச்சியடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சலுகைகள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சம்பளத் திருத்தம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எமக்கு வந்தாலும், 2024ல் அதைச் சமாளிப்பதற்கான அரசாங்க வருவாய் வளர்ச்சி தற்போது இல்லை.
கடந்த காலங்களில் பல்வேறு சலுகைகள் பொறுப்பற்ற முறையில் வழங்கப்பட்டு எமது பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் அழித்தது.
அரச ஊழியர்களின் சம்பளம்
அத்தகைய நிலைக்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது, சமூகத்தின் ஒவ்வொரு பகுதியும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் பொருளாதாரம் வளரும் விதம் மற்றும் அரசாங்க வருவாய் அதிகரிக்கும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில், அடுத்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்யலாம்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |