அதியுயர் z புள்ளி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka SL Protest Education
By Shalini Balachandran Dec 23, 2024 08:17 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in கல்வி
Report

இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் நாடாளவியரீதியில் போராட்டம் முன்னெடுக்கபடும் என வடக்கு கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “வடக்கில் உள் வாரி பட்டதாரிகள் 2500 மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நியமனம் அரசினால் வழங்கப்பட்டது, அரசினால் நியமனம் வழங்கப்பட்ட பொழுதிலும் 2014 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்ளுக்கு அதாவது 2020 / 2021 பட்டமளிப்பு பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கவில்லை.

பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் மாணவர்கள் கைது

பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் மாணவர்கள் கைது

உள்வாரி பட்டதாரிகள் 

யாழ் பல்கலைக்கழகம் மாணவர்களை வேலைவாய்ப்பில் உள்ளீர்க்க வேண்டிய தேவை குறித்து தெளிவுபடுத்தி கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தது அத்தோடு கொரோனா , குண்டுவெடிப்பு, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க போராட்டம் என்பன எமக்கு பட்டத்தினை பெறுவதில் தாமதம் ஏற்பட காரணமாக அமைந்தன இருந்த பொழுதிலும் எமது அணியினை சேர்ந்த வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த அரசாங்கத்துடன் நாம் பல்கலைக்கழகம் எமக்கு தந்த நியாயபூர்வமான கோரிக்கையை முன்வைத்து கலந்துரையாடலை மேற்கொண்ட பொழுதிலும் அரசாங்கம் மாறிவிட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடந்த ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி விரைவு தபாலை அனுப்பினோம் , நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பிரதமர் ஹரிணிக்கு விரைவு தபால் அனுப்பிய பொழுதும் எமக்கு எந்த பதிலும் வழங்கபடவில்லை.

அதியுயர் z புள்ளி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Gov Employment Graduates With Highest Z Scores Sl

அரசுக்கு சார்பானவர்கள் ஜனாதிபதி தேர்தல் முடிய பேசலாம் பாராளுமன்ற தேர்தல் முடிய பேசலாம் என தெரிவித்தனர் இரு தேர்தல் முடிந்தும் எந்த பலனும் இல்லை.

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் எம்மை விட குறைந்தளவான z புள்ளிகளுடன் உள்ளீர்கபட்டு பின்னர் நியமனத்துடன் வெளியேறுகின்றார்கள்.

பின்னர் நாம் படித்து முடிக்க முதல் அடுத்த பட்டத்தினை யும் தொடர்கின்றார்கள் கூடுலான புள்ளிகளை பெற்ற நாம் பெயின்டிங் ,கூலி ,சந்தை வியாபாரிகளாக உள்ளோம்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

போட்டி பரீட்சை 

தற்பொழுது போட்டி பரீட்சை குறித்தூ பேசுகின்றனர். நல்ல விடயம் எமக்கு ஆட்சேபனை இல்லை எனினும் அதற்கு முன்னர் உள்ளவர்களுக்கு பரீட்சை நடாதபட்டதா மேலும் தொல்லியல் , சமூகவியல்,தத்துவவியல் ஆகிய பாடங்களுக்கு வர்த்தமானியில் போட்டி பரீட்சைக்கு கோரப்படுவதில்லை அவர்கள் பட்டதாரிகள் இல்லையா ஆக இங்கே போட்டி பரீட்சைகளும் பாரபட்சமின்றி நடாத்தபடவேண்டும்.

வடக்கிலே சிங்கள மொழி இரண்டாம் மொழி கற்கைநெறிக்கான ஆசிரியர் வெற்றிடம் உள்ளது.

திணைக்களங்களில் மாகாண சபையின் கீழே மொழிபெயர்பாளர்களுக்கு வெற்றிடம் உள்ளது வெளியே தகுதி வாய்ந்த பலர் உள்ளனர்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மொழிபெயர்பாளர் வெற்றிடம் உள்ளது.

அதியுயர் z புள்ளி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Gov Employment Graduates With Highest Z Scores Sl

அரசாங்கம் 35000 பட்டதாரிகளை உள்ளர்பதாக கூறிய பொழுதிலும் இதுவரை நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை .ஆகவே ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி தேர்தல் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்க முடியாது, தேர்தலுக்கு முன்னர் 2020/2021 வெளியேறிய உள்வாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளித்து வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

வெளிவாரி பட்டதாரிகள் தாம் பிறிதொரு வேலைவாய்ப்புடன் இதனை தொடர்பவர்களாவும் இருக்ககூடும் தொடர்ந்து 2022/2023 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தொடர்ந்து எம்முடன் எந்த வித பேச்சுவார்த்தையையும் அரசு மேற்கொள்ளாது விஜயின் வடக்கு கிழக்கு இலங்கை தழுவிய பட்டதாரிகள் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கபடும் உங்கள் ஆட்சி மீது எமக்கு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024