இடைநிறுத்தப்பட்ட இலகுரக தொடருந்து திட்டம் மீண்டும் ஆரம்பம்..!
Gotabaya Rajapaksa
Sri Lanka
Transport Fares In Sri Lanka
By Kalaimathy
கோட்டாபய ராஜபக்ச அதிபராக பதவி வகித்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக தொடருந்து செயற்றிட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்க மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நடைமுறைப்படுத்த விசேட நிபுணர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்தக் கட்ட நடவடிக்கை
இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கிடைத்த பின்னர் செயற்றிட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ் சத்யானந்த தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி