லஞ்சம் பெற்ற அரச உத்தியோகத்தர் அதிரடி கைது
Sri Lanka Police
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிகமுவ, போயாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர் சுகாதார அமைச்சின் போக்குவரத்து திணைக்களத்தில் கடமையாற்றும் பொது முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் ஆவார்.
நீதிமன்றில் முன்னிலை
அதன்போது, ஒரு வாகனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கி அறிக்கை அளிக்க 80,000 ரூபாய் இலஞ்சம் கேட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி