மாங்குளத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் இன்று(27.01.2026) பிற்பகல் குளவி கொட்டியதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 03 மாணவர்கள் காயமடைந்தனர்.
துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோர்ஜ் என்ற அரச உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குளவி கூடு கலைந்து வீதியால் சென்றவர்களை கொட்டியது
பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் மாங்குளம் பழைய கொலனி பகுதியில் குளவி கூடு கலைந்து வீதியால் சென்றவர்களை கொட்டியது

ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு
இதில் துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோர்ஜ் என்ற அரச உத்தியோகத்தர் குளவிகொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்

இதனைவிட 3 பாடசாலை மாணவர்கள் குளவிகொட்டிற்கு இலக்கான நிலையில் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |