மீண்டும் மின்கட்டண உயர்வு :அரசுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு
மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக மின்சார பயனர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் எம்.டி.ஆர். அதுல இதனைத் தெரிவித்தார்.
கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை
இலங்கை மின்சார சபையின் புதிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரியந்த விக்ரமசிங்கவும், இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால், அது கட்டுமானத் துறைக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர சுட்டிக்காட்டினார்.
தீவிரப்படுத்தப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை
இதேவேளை இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் நாளை(06) முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்சார சபையின் மூத்த அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நாளை முதல் நிறுத்தப்படும் என்று அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இடித்தழிப்பு : மீண்டும் கட்டித்தர மறுக்கும் நபர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
