ஈஸ்டர் கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளை பாதுகாக்கும் அரசாங்கம் : நாமல் குற்றச்சாட்டு
ஈஸ்டர் கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாப்பதோடு, புலனாய்வு அதிகாரிகளையும் சிறையில் அடைக்கிறது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச தெரிவித்தார்.
"இன்று, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஈஸ்டர் கோப்புகளை மூடிமறைத்த மற்றும் புலனாய்வு அறிக்கைகளை மறைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கிறது.
போரை முடிவிற்கு கொண்டு வந்தவர்கள் சிறையில் அடைப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவந்த புலனாய்வுத் தலைவர்களை இந்த அரசாங்கம் சிறையில் அடைத்துள்ளது. போர் வீரர்களையும் புலனாய்வு அமைப்புகளையும் வழிநடத்திய அதிகாரிகளையும் அவர்கள் சிறையில் அடைக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்திட்டங்களாலும், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகளாலும், கிராம மக்கள் மீண்டும்சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சுற்றி அணிதிரள்கின்றனர். நாங்கள் செயல்பட்ட ஒரு அரசியல் சக்தி. நாங்கள் பொய் சொல்லி வாக்கு கேட்கவில்லை," என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
கெக்கிராவாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 20 மணி நேரம் முன்