கொழும்பு துறைமுகத்திற்குள்ளும் நுழைந்தது சீனா
colombo
china
habour
By Sumithiran
கொழும்பு போட்சிற்றியை அடுத்து கொழும்பு துறைமுகத்திலும் சீனாவுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 13 ஏக்கர் பகுதியே சீன நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு வெறும் 8 இலட்சம் ரூபா படி குத்தகைக்கு இந்த பகுதி வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவித்தார்.
முறையான கேள்விப்பத்திரம் அறிவிக்கப்பட்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.