செம்மணிக்கு பொறுப்பு கூறவேண்டியோருடன் இணைந்து யாழில் ஆட்சி : தமிழரசை சாடும் பிமல்
வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சில குழுக்களுடன் இணைந்து யாழ். மாநகரசபையில் ஆட்சி அமைத்துள்ளனர். செம்மணி புதைகுழியில் உள்ள சில எலும்புக்கூடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்புடன் இணைந்துதான் இவர்கள் இப்படி ஆட்சியமைத்துள்ளனர் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (bimal ratnayake)தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(05) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் நீதிமன்ற கண்காணிப்புடன் இடம்பெற்றுவருகின்றன. தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.
வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கே அதிக வாக்குகள் உள்ளன. நிச்சயம் நாம் நீதியை நிலைநாட்டுவோம்.
தெற்கில் இனவாதத்தை ஏற்படுத்த ராஜபக்சாக்கள் முயற்சி
தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எப்படியாவது மீள ஏற்படுத்துவதற்கு ராஜபக்சக்கள் முற்படுகின்றனர். வடக்கில் இவர்கள் முற்படுகின்றார்கள். அதனால்தான் ஏதேனும் ஒரு சம்பவத்தை தூக்கிப்பிடிக்கின்றனர்.
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைக்கு நாம் எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்கூட ஒத்துழைப்பு கோரியுள்ளோம். தேசிய சமத்துவ அரசாங்கம் வந்துள்ளதால் இவர்கள் வடக்கில் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் என மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
