அடுத்தவாரம் முதல் வழமைபோன்று அரச நிறுவனங்களின் செயற்பாடுகள்?
அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் வழமை போன்று மீணடும் செயற்படத் தொடஙகுமென எதிர்பார்ப்பதாக பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் தடுப்பூசி செயல்முறை மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், அரசசேவை அடுத்த வாரம் முதல் வழமை போன்று மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
எனினும், மே 10 அன்று வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி அரசு ஊழியர்கள் தற்போதும் செயல்பட வேண்டும், என்றார்.
அதன்படி, பொது நிறுவனங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மட்டுமே அழைக்க நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அறிவிப்பு வரும் வரை இந்த சுற்றறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.