அரசாங்கம் - பங்காளிக் கட்சிகள் மோதல் என்பது வெறும் நாடகமே! சாடுகிறது ஜே.வி.பி
JVP
Wimal Weerawansa
Udaya Gammanpila
SriLanka
Vijitha Herath
By Chanakyan
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் காணப்படும் முறுகல் நிலை என்பது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவதற்கான நாடகமே என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இந்த நாடகத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila), மற்றும் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nananayakara) போன்றோர் நடித்துள்ளனர் என்றும் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
கெரவலபிட்டிய யுகதனவி அனல் மின்நிலையம் ஒப்பந்த விவகாரம் தொடர்பில் பங்காளி கட்சிகள் அரசாங்கத்துடனான முரண்பாடு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,