அரசின் தீர்மானம் பாரதூரமானது - அத்துரலியே ரத்ன தேரர் எச்சரிக்கை
அரசாங்கம் ஒருபுறமும், நாட்டு மக்கள் மறுபுறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் (Athuraliye Rathana Thero).
புறக்கோட்டையில் நேற்று இடம்பெற்ற 'மக்கள் பேரவை' எனும் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாவும் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய பொருளாதாரம், இறையாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.
ஆனால், நாட்டின் வலுசக்தி தொடர்பிலான அதிகாரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் தனித்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் பாரதூரமானது.
அரசாங்கத்தை வீழ்த்துவதும், நெருக்கடிக்குள்ளாக்குவதும் எமது நோக்கமல்ல, தவறுகளை திருத்திக்கொண்டு நாட்டின் இறையான்மையை பாதுகாக்கவே நாம் முயற்சிக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.